Tamil News
Tamil News
Tuesday, 13 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

திமுகவையும் விலைவாசி மற்றும் வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவிப் எடபாடி அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களுக்கு பின்னர் சொத்து வரி, வீட்டு வரி, பால் விலை, குடிநீர் வரி ஆகியவை உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்சார வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடபாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அவரது ஆதரவாளர்கள் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.  

எடப்பாடி விமர்சனம்

இந்நிலையில் கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று கலந்துகொண்டார். எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை, விலைவாசியை கட்டுக்குள் வைக்கவில்லை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என அடுக்கடுக்காக கவிமர்சனம் செய்தார். மேலும் திமுக ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுவதாக கூறிய எடப்பாடி, அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக விமர்சித்தார். 

உதயநிதியை விமர்சித்த எடப்பாடி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதை குறிப்பிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஒரு குடும்ப கட்சி என்றும், அது கட்சி அல்ல கம்பெனி என்றும் விமர்சித்தார். மேலும் உதயநிதி அமைச்சராவதால் தமிழ்நாட்டில் என்ன பாலாறும் தேனாறுமா ஓடப்போகிறது என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். 

இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.