Tamil News
Tamil News
Thursday, 15 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியான நிலையில், அதில் காவி நிறத்தில் தீபிகா படுகோனே பிகினி அணிந்திருந்ததை கண்டித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஷாருக்கானின் பதான்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் 'பதான்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'பேஷ்ரம் ரங்' பாடல் சில தினங்களுக்கு முன்பு யூடியூபில் வெளியானது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் படுகவர்ச்சியாகவே நடித்திருப்பார். 3 நாட்களில் 43 மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது.

காவி நிறத்தில் நீச்சல் உடை

இந்த பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறம் காவி. அதேபோல, ‘பேஷ்ரம் ரங்’ என்ற இப்பாடலில் இடம் பெறும் பேஷரம் ரங் என்ற வார்த்தைக்கு ‘வெட்கமற்ற நிறம்’ என்று பொருள். இதனால் இப்பாடலின் பொருளும், அதில் தீபிகா படுகோனே அணிந்துள்ள காவி நிற பிகினியும் ஒத்துப்பார்த்த இந்துதுவ ஆதரவாளர்கள் ”காவி நிறம் என்ன வெட்கமற்ற நிறமா?” என்று கொந்தளித்து வருகின்றனர். 

https://youtube.com/watch?v=huxhqphtDrM&si=EnSIkaIECMiOmarE

அதோடு, காவி நிற பிகினியில் தீபிகா இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பினர் கடும் கண்டனங்களையும் அருவருக்கத்தக்க கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

எச்சரித்த உள்துறை அமைச்சர்

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதாவது, “ பதான் படத்தில் இடம்பெறும் இப்பாடலின் காட்சியில் காவி நிறத்திலான கவர்ச்சி உடையில் தீபிகா படுகோனே காட்சிகளை நீக்கவில்லை என்றால் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும்” என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னெடுக்கப்படும் மதஅரசியல்

பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மதரீதியிலான அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த காவி அரசியல் இன்று திரைத்துறையையும் விட்டு வைத்தப்பாடில்லை. 

குறிப்பாக பாலிவுட்டில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தைச் சேர்ந்த நடிகர்கள் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களின் திரைவாழ்க்கையும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கையும் குறைக்கும் அளவிற்கு இந்த காவி அரசியல் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. 

இஸ்லாமியர்கள் என்பதாலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்டோர் தங்கள் திரைத்துறையில் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், திரைத்துறையை தாண்டி தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்தித்துவருகின்றனர்.

ஷாருக்கான் மகன் 

இதில் குறிப்பாக இந்த மத அரசியலால் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கினார் ஷாருக்கான். அதாவது அவருடைய மகனான ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனால், ஆர்யான் கான் போதைப்பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்று தீவிர விசாரணை நடத்தாமலேயே ஆர்யன் கானை கைது செய்தனர். 

பாலிவுட்டின் பாட்ஷா என்றழைக்கப்பட்ட ஷாருக்கான் நினைத்திருந்தால் தன் மகனை சிறையில் இருந்து வெளியில் எடுத்திருக்க முடியும். ஆனால், எவ்வளவு பணம் இருந்தாலும் அவர் ஒரு இந்து அல்ல என்பதால் தான் அவரால் அவரின் மகனான ஆர்யன் கானை மீட்க முடியாமல் போனது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு ஆர்யன் கானை மீட்ட ஷாருக்கானுக்கு பலத்தரப்பு மக்களும் ஆதரவுக் குரல் எழுப்பினாலும், இந்து மதவாத சக்திகள் அவர்மீது வன்மத்தையே வெளிப்படுத்தினர். அதனால்தான், தற்போது ஷாருக்கானின் திரைப்படத்தை எதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து சர்ச்சைகளை உண்டாக்கிவருகின்றனர்.