Tamil News
Tamil News
Wednesday, 14 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

ப்ரீ ரிலீஸ் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யான் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுடலகின் முன்னணி நடிகரான இருப்பவர் விஜய். இவரின் நடிப்பில் தயாகிக் கொண்டிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநரான வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இதனால் இப்படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. 

ஏகப்பட்ட நடசத்திரப் பட்டாளங்கள் 

இப்படத்திற்கு தெலுங்கில் வாரசுடு என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷ்யாம், குஷ்பு, யோகிபாபு, சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ஸ்ரீ வெங்சடேஷ்வர பிக்சர்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். 

வாரசுடு ப்ரீ ரிலீஸ் பணிகள் மும்முரம் 

இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவுற்ற நிலையில், இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தெலுங்கு வெளியீடான வாரசுடு படம் ப்ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யான் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தெலுங்கில் ஹிட் அடித்த குஷி ரிமேக்

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த குஷி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து புகழ் பெற்றார். இதனையடுத்து முதன் முறையாக விஜயின் ப்ரீ ரிலீஸில் பவன் கல்யான் பங்கேற்க உள்ளது வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது