Tamil News
Tamil News
Friday, 16 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ் கதாபாத்திரத்தின் முழு நீளப்படம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ்

'களம்' உட்பட ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த அவர், தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார். 

விக்ரம் 

அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய் திருப்புமுனையாக அமைந்தது தான் ‘விக்ரம்’. உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இப்படியும் ஒரு படம் கொடுக்க முடியுமா என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்லாமல். லேசியு என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் அடுத்து எந்தப்படம் வெளியாகும் என்று அனைவரும் காக்க வைத்துள்ளார். இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதிய டிரெண்டை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். 

மிரட்ட வருகிறார் ரோலெக்ஸ் சார்

விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலெக்ஸ் என்ற கதாப்பாத்திரம் இடம்பெறும். அந்த ரோலெக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து ஒரு முழு நீளப்படம் வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். 

சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த கோலேஷ் கனகராஜ், தான் இயக்கவுள்ள அடுத்தடுத்த படங்களை வரிசைப்படுத்தினார். அதன்படி அவர் அடுத்ததாக விஜயை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து 'கைதி 2', 'விக்ரம் 2' மற்றும் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தின் முழு நீளப் படம் என தனது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளை பட்டியலிட்டுள்ளார். இருப்பினும், அந்தந்த நடிகர்களின் நேரத்தைப் பொறுத்து இந்த வரிசை மாற்றப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.