Tamil News
Tamil News
Friday, 16 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

வாரிசு - துணிவு படங்களுக்கு 50 % திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசுத் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்க உதயநிதியிடம் தயாரிப்பாளர் தில் ராஜு பேச உள்ளார்.

நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கும் வாரிசு

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது முதன்முறையாக தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னனி தயாரிப்பாளரான தில்ராஜு விஜயின் படத்தை தயாரித்து வருகிறார். தெலுங்கின் முன்னனி இயக்குநரான வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். 

8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்- அஜித் படங்கள்

பொங்கல் ரிலீஸாக இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  நடிகர் அஜித்தின் துணிவு படமும் பொங்கல் வெளீயீடாக திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், துணிவு படத்தை வெளியிட உள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலின் இரு படத்திற்கும் 50 சதவீத திரையரங்குகள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் அதிக திரையரங்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்த வாரிசு படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

உதயநிதியிடம் பேச உள்ள தில் ராஜு

இது தொடர்பாக தெலுங்கு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜீ, வரிசு படத்திற்கு அதிக திரையங்கு கிடைப்பதற்கு உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும், தமிழில் விஜய் தான் நம்பர் ஒன் என்றும்  இது பிசினஸ் என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.