Tamil News
Tamil News
Thursday, 15 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

பொன்முடியை இழிவாக பேசுவதாக நினைத்து நயன்தாராவின் குழந்தைகளை தேவையில்லாமல் இழுத்து பேசிய சி.வி.சண்முகத்திற்கு எதிராக கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றன. 


திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரான சி.வி.சண்முகம் கலந்துகொள்வதாக இருந்த நிலையில், அதே இடத்தில் புதிய அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக மற்றும் திமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டதும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

திமுகவை சாடிய சி.வி.சண்முகம்

இந்நிலையில், கூட்டத்தில் கொள்ள சி.வி.சண்முகம் அங்கு வர, தனது கட்சிக்காரர்களை அவர் சமாதானப்படுத்தினார். பிறகு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், கருணாநிதியின் ஆட்சியில் மக்களுக்கு கலர் டி.வி கொடுத்தார்கள். 2,000 கோடி ரூபாய்க்கு கலர் டி.வி-யைக் கொடுத்துவிட்டு, ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் கேபிள் இணைப்பு மூலம் 7,000 கோடி ரூபாய் சம்பாதித்த குடும்பம் கருணாநிதி குடும்பம். 

இந்த நாட்டுக்காகவும், சமுதாயத்துக்காகவும், சமூகநீதிக்காகவும், கடுமையாக உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்த உதயநிதி, இன்று அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார். இதுவரை அவரின் அப்பா கிழித்தார், இப்போது இவர் கிழிக்க வந்திருக்கிறார். இது என்ன நாடு... தாத்தா, அவரின் பிள்ளை முதலமைச்சர். பேரன் இப்போது அமைச்சர், வரும் 'தை' மாதத்தில் துணை முதலமைச்சர். முதல்வரின் தங்கை எம்.பி. இப்படி அந்தக் குடும்பமே தமிழகத்தை ஆண்டு, கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

என்ன கிழித்தார் உதயநிதி? 

தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், "மக்களை விடுங்கள், திமுக-வுக்கு உதயநிதி என்ன கிழித்திருக்கிறார் என்று அமைச்சர் பதவி... மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை யார் அவர்... இன்று தமிழகத்தின் அமைச்சர். வெட்கக்கேடு... மானக்கேடு... இதுதான் சுயமரியாதை இயக்கமா... திமுக-வின் சுயமரியாதை, உதயநிதியின் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார். 

நயன்தாராவிற்கு feeding bottle

மேலும், "உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்குத் தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் கேட்போம் என்று பொன்முடி சொல்கிறார். நயன்தாராவிற்கு feeding bottle வாங்கிக் கொடு. இரண்டு குழந்தை இருக்கு, நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டட்டும்" என்று தரம் குறைந்து பேசினார் சி.வி.சண்முகம்.  

டெபாசிட் கூட கிடைக்காது

"உதயநிதி, கனிமொழி, துர்கா ஸ்டாலின் காலைக் கழுவுவது எங்களின் வேலை இல்லை. அதிமுக-வினர் சுயமரியாதையோடு இருப்போம். சாதாரணத் தொண்டனாக இருந்து இன்று அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. உங்க ஆட்சியில் இது முடியுமா?  திராவிட மாடல் என்கிறார்களே தைரியம் இருந்தால் உங்கள் கட்சியில் பொதுக்குழு கூட்டி தேர்ந்தெடு பார்ப்போம். உங்க அப்பாவே சாகும் வரை உனக்கு பதவி கொடுத்தாரா இல்லையே. நாங்கள் 'அம்மா அரசு' என்று சொல்வதுபோல், உங்களால் 'கலைஞர் அரசு' எனச் சொல்லி ஓட்டு கேட்க முடியுமா... டெபாசிட்கூட கிடைக்காது" என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார். 

வலுக்கும் எதிர்ப்புகள்

சி.வி.சண்முகத்தின் இந்த இழிவான பேச்சை கேட்ட அரசியல் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்தவர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.