Tamil News
Tamil News
Thursday, 15 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சிறப்பான சதத்தால் இந்திய அணி, வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

டெஸ்ட் தொடரில் சிறப்பா ஆடி வரும் இந்தியா

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொடுள்ள இந்தியா அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் வங்கதேசத்துடன் விளையாடி வருகிறது. சாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து சிறிது நேரம் தாக்குப்பிடித்தரிஷப் பந்த் 46 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா - ஸ்ரேயாஸ் கூட்டணி ரன்களை சேர்த்தனர்.  சிறப்பாக ஆடிய இந்த ஜோடியின் புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் ஆட்டமிழக்க பின்வரிசையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்க்க இந்திய அணி  404 ரன்கள் குவித்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். 

தடுமாறிய வங்கதேசம்

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 100 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை மளமளவென இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய வங்கதேசம்  55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

2வது இன்னிங்ஸிலும் கலக்கிய இந்தியா

வங்காளதேச அணி பாலோ ஆன் ஆன நிலையிலும் இந்திய அணி தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. கே.எல்.ராகுல் , சுப்மன் கில்தொடக்க வீரர்களாக ஆடினார். இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 23 ரன்களில் வெளியேறினார். இதனை புஜாரா , கில் இனைந்து நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து ஆடிய கில் சதமடித்து அசத்தினார்.இதுடெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதனை தொடர்ந்து 110 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய புஜாரா சதமடித்து அசத்தினார்.

வங்கதேசத்துக்கு 513 ரன்கள் இலக்கு 

இரண்டாம் நாளில் 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தபோது 2வது இன்னிங்க்சை டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.