Tamil News
Tamil News
Saturday, 17 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

3வது இடத்திற்கான போட்டியில் சமபலம் வாய்ந்த குரோஷியா - மொராக்கோ அணிகள் மோதுவதால் இன்று மோதுகின்றன.

எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபிஃபா உலக கோப்பை

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. அதற்கு முன்னதாக இன்று (சனிக்கிழமை) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் சந்திக்கின்றன. 

ஆப்பிரிக்கா கண்டத்தில் முதல் அணி

லீக் சுற்றில் தனது பிரிவில் முதலிடத்தை பெற்ற மொராக்கோ அணி வெளியேற்றுதல் சுற்றில் ஸ்பெயினை தோற்கடித்தது. இதனையடுத்து கால்இறுதியில் விளையாடிய மொராக்கோ அணி  1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை சாய்த்தது. அதைத்தொடர்ந்து அரைஇறுதிக்குள் நுழைந்த அந்த அணி பிரான்ஸிடம் 0-2 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்ந்தது. தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ அணி அரைஇறுதிக்கு முன்னேறிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

பலம் வாழ்ந்த குரோஷியா

குரோஷியா அணியை பொறுத்தவரை தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் டிரா கண்டது. இதனால் தனது பிரிவில் 2 ஆம் இடம் பிடித்த குரோஷியா நாக்-அவுட் சுற்றில் ஜப்பானை தோற்கடித்தது. இதனையடுத்து கால்இறுதியில் பிரேசிலுடன் மோதிய குரோஷியா பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரைஇறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் அடி பணிந்தது. 

அனல் பறக்கும் போட்டி

சம பலத்துடன் இருக்கும் இரு அணிகளும் 3 இடத்திற்கு மோதவுள்ள இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால் இருநாட்டு ரசிகர்களும் இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.