Tamil News
Tamil News
Sunday, 18 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினாவின் வெற்றியை மயிலாப்பூர், மாம்பலமா கொண்டாடும் என்று எழுத்தாளர் மணிமாறன் கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அர்ஜெண்டினா வெற்றி

கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா -பிரான்ஸ் அணிகள் மோதின. உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை கட்டிப்போட்ட இந்த போட்டி பரபரப்பின் உச்சத்தை தொட்ட போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது. அப்படிபட்ட பரபரப்பான இப்போட்டியில் அர்ஜெண்டினா 7 - 4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இதனால், உலகம் முழுவதிலும் உள்ள அர்ஜெண்டினா அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்துவருகின்றனர். கால்பந்தாட்ட ஜாம்பவானும் அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸியின் கடைசி உலக கோப்பை என்று கணிக்கப்பட்ட இந்த போட்டியில் அவர் தலைமையில் அர்ஜெண்டினா கோப்பையை கைப்பற்றியதற்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். தங்கள் சொந்த நாடே வெற்றிப்பெற்றது போல் உலக ரசிகர்கள் அர்ஜெண்டினாவின் வெற்றியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 

அர்ஜெண்டினா வெற்றியை கொண்டாடும் திராவிடர்கள்

இந்நிலையில், அர்ஜெண்டினாவின் வெற்றியை மயிலாப்பூர், மாம்பலமா கொண்டாடும்? வடசென்னை தான் கொண்டாடும் என்று எழுத்தாளர் வே.மணிமாறன் கூறியுள்ளது பலரது கவனத்தையும் பெற்றதோடு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

இதுகுறித்து பதிவிட்ட எழுத்தாளர் வே.மணிமாறன், “மயிலாப்பூர்,மாம்பலமா-அர்ஜெண்டினா வெற்றியைகொண்டாடும்? வடசென்னைதான் கொண்டாடும். தேசப்பற்று பேசுகிற பரம்பரை சங்கிகள்,சர்வதேச அரசியலில் எப்போதும் அமெரிக்க,ஜரோப்பிய ஆதரவாளர்கள். போரில் மட்டுமல்ல. விளையாட்டிலும்.

https://www.facebook.com/mathimaranv

கிரிக்கெட்டில் England vs West Indies மேட்ச் நடந்தால், இங்கிலாந்து ஜெயிக்கனும் நினைக்கும் ஆரியம். West Indies வெற்றிபெறுனும் என நினைப்பது திராவிடம். 

ஆரியம் vs திராவிடம் என்பது நிலபரப்பல்ல, அது அரசியல் உணர்வு. அதனால் அர்ஜெண்டினா வெற்றியை திராவிட உணர்வாகக் குறிப்பிடுவது ஒரு குறியீடு. ஆகவே, எப்போதும்போல் எதையும் உங்களின் திமுக எதிர்ப்பு காழ்ப்புணர்ச்சியோடு தடவிப் பார்த்து கருத்துச் சொல்கிற அறியாமையோடு இதையும் அணுகாதிர்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

கேலி செய்த பத்திரிக்கையாளர்

எழுத்தாளர் வே.மணிமாறனின் இந்த பதிவை கேலி செய்யும் விதமாக பதிவிட்டுள்ள பத்திரிக்கயாளர் அனந்தகிருஷ்ணன், “திராவிடப் பெருந்தகை ஒருவர் அர்ஜென்டைனாவின் வெற்றி திராவிட மாடலின் வெற்றி, சமூகநீதியின் வெற்றி என்று சொல்லியிருக்கிறார். நிச்சயம்.  

https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/pfbid02HdcRCKe6RrKq9g9XRsGaLKGfQyDsC6aeBb6qmyrsLbYu3QrQAMQ1X1WSG2Ruop1Zl

'பெரியார் மட்டும் இருந்திராவிட்டால்' என்று மெஸ்ஸியே சொல்லியிருக்கிறாராம். நேராக பெரியார் திடலுக்கு வந்து வந்து யுனெஸ்கோ விருது உண்மையாகக் கிடைக்காவிட்டால் என்ன, உலகக் கோப்பையே உம்முடையது என்று சொல்லப் போகிறேன் என்று அறிக்கை விடுத்திருக்கிறாராம்” என்று பதிவிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரின் கருத்தினால் சமூகவலைத்தளங்களில் சர்ச்சை வெடித்துள்ளது.