தன் மேக்கப் குறித்து கேலி செய்த நடிகை மாளவிகா மோகனனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
கனெக்ட்
இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தய்யாரிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தை அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஹாரர் திரைப்படமான இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வர்வேற்பை பெற்றுள்ளது.
நேர்காணல்
இந்நிலையில், சமீபத்தில் கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக, நேர்காணல் ஒன்றில் நயன்தாரா கலந்துகொண்டு பேசி இருந்தார். அந்த முழு நேர்காணலும் நேற்று 2 பாகங்களாக வெளியிடப்பட்டது. அதில், பல கேள்விகளுக்கு பதிலளித்த நயன் தாரா, தன்மீது வைக்கப்பட்ட சில விமர்சனங்கள் குறித்தும் பேசினார்.
மாளவிகா விமர்சனம்
அப்போது பேசிய அவர், “ஒரு காலகட்டத்தில் நான் கம்ப்ளீட் மேக் அப் போட்டு நடித்த படங்களும் இருந்தன. இது குறித்து விமர்சனமும் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மற்றொரு நடிகை ’ஒரு கமர்ஷியல் படத்தில் மருத்துவமனையில் இருப்பதுபோன்ற ஒரு காட்சியில் நன்றாக மேக்அப் போட்டு கொண்டு முடியை நேர்த்தியாக வைத்து நடித்துள்ளேன்’ என்று என் பெயரை வெளிப்படையாக சொல்லாமல் என்னை தான் குறிப்பிட்டு கூறியிருந்தார். மேலும், மருத்துவமனையில் இருக்கும்போது எப்படி அப்படி நடிக்க முடியும் என ஏதோ சொல்லியிருந்தார்.
https://twitter.com/Nayanfan1003/status/1605523982425673729?s=20&t=TkVakQSPGwnmyiQj2_wXkQ
நயன் கொடுத்த பதிலடி
மருத்துவமனை சீனில் நடிக்கும்போது பக்காவாக ட்ரஸ் பண்ணி இருக்க முடியாது தான் என்றாலும், அதற்காக முடியை விரிச்சு போட்டுக்கிட்டா நடிக்க முடியும். அதே போல கமர்சியல் திரைப்படங்கள் மற்றும் ரியலிஸ்டிக் திரைப்படங்களுக்கான தோற்றம் மாறுபடும். கமர்சியல் திரைப்படங்களில் அந்த அளவிற்கு சோகமாக நடிக்க வேண்டும் என இல்லை. இயக்குநர்கள் என்ன எதிர்பார்கிறார்களோ அதைத்தான் செய்ய வேண்டும்" என நயன்தாரா கூறியிருந்தார்.
பொங்கும் ரசிகர்கள்
நயன்தாரா எந்த நடிகையை குறிப்பிடுகிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நடிகை குறித்த வீடியோ ட்விட்டரில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருந்தது வேறு யாருமில்லை மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல், சூப்பர் ஸ்டார் என்று பெயரிட்டு கூறி விளக்கம் கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த நயன் தாரா ரசிகர்கள் பலரும் நடிகை மாளவிகா மோகனனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.