Tamil News
Tamil News
Friday, 23 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த சுப்ரமணியன் சுவாமி, தமிழக பாஜகவை பிச்சை எடுக்கும் கட்சி என்று விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 லட்சம் ரூபாய் வாட்ச் சர்ச்சை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா என சில யூடியூப் சேனல்கள் வெளியிட்ட செய்தி, இன்று தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் யூடியூப் சேனல் ஒன்று அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் பெல்&ரோஸ் நிறுவனம் தயாரித்த ரபேல் கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சம் ரூபாய் என வீடியோ வெளியிட்டது. இது குறித்து சமூக வலைதளத்தில் திமுகவினர், ஐ.பி.எஸ். ஆக இருக்கும்போதே மாசக் கடைசியில் சாப்பிடக்கூட தன்னிடம் காசு இருக்காது எனக் கூறிய அண்ணாமலைக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு வாட்ச் கட்டும் அளவிற்கு எப்படி பணம் வந்தது, எங்கிருந்து வந்தது,  என பல கேள்விகளைக் கேட்டுவருகின்றனர். 

செந்தில் பாலாஜி விமர்சனம்

மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் ட்விட்டரில் வார்த்தைப் போரே நடக்கிறது என சொல்லும் அளவுக்கு, அண்ணாமலையும், செந்தில் பாலாஜியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர். 

அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சின் விலை என்ன என தொடங்கிய செய்தி, அண்ணாமலை ஆடு மேய்க்கிறாரா அல்லது, ரவுடிகளைப்போல தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கிறாரா என்ற கேள்வியில் வந்து நிற்கிறது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆதாரம் காண்பிக்கப்படவில்லை அதைப்போல அண்ணாமலை தரப்பும் வாட்ச் விலை குறித்தே மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிவருகிறாரே தவிர தக்க பதிலை கொடுக்காமல் இருந்து வருகிறார். 

பாரதிய பிச்சை வாங்குற பார்ட்டி

இப்படி தொடர்ந்து பாஜகவையும் பாஜக தலைவர் அண்ணாமலையையும் திமுகவினர் வெளுத்து வாங்கி வரும் நிலையில், தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமியும் பாஜகமீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

அதில் தமிழகத்தில் பாஜகவின் செய்லபாடுகள் குறித்து பேசிய சுப்ரமணியன் சுவாமி, ”பாஜக தமிழ்நாட்டில் இருக்கிறதா? நான் ரொம்ப தேடி இருக்கேன்.. அறிக்கையில் மட்டுமே பார்த்துள்ளேன்.. களத்தில் பார்த்ததில்லை” என்று கூறினார். 

மேலும், “6 முறை நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளேன். யாரும் தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்பதில்லை. ஆனால் தமிழக பாஜக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. அது ஒரு பிச்சை எடுக்கும் கட்சி, பாரதிய பிச்சை வாங்குற பார்ட்டி” என்று தன் சொந்த கட்சியான பாஜக மீதே விமர்சனம் வைத்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.  

ஜெ.,வை முதலமைச்சராக்கினேன்

தொடர்ந்து பேசிய சுப்ரமணியன் சுவாமி, “ஹைதரபாத்தில் ஒளிந்து இருந்த ஜெயலலிதாவை காப்பாற்றி நான் தான் முதலமைச்சராக்கினேன்” என்று தெரிவித்துள்ளார். 

நான் கோமாளி அல்ல

அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சை குறித்து பதிலளித்த சுப்ரமணியன் சுவாமி, “ வாட்ச் குறித்து பேச நான் கோமாளி அல்ல, நான் ஒரு அரசியல்வாதி. வாட்ச் ஒரு இயந்திரம் மட்டும் தான். அதற்காக வாட்ச்சிற்கு நான் 5 லட்சம் ரூபாய் செலவு செய்து என்று கூறினேன் என்றால் நான் மடையனாகத்தான் இருக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட மடையன் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.