Tamil News
Tamil News
Tuesday, 27 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

கரும்பு சர்ச்சை

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது. இதற்காக நியாய விலைக் கடைகளில் டோக்கன் வழங்கவும் அறிவிப்பு வெளியானது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. 

கடந்தாண்டு வழங்கப்பட்ட கரும்பு

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கியது. ஆனால் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என கடந்த 22-ம் தேதி என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரும்புடன் ரூ.5000 வழங்க வேண்டும்

அதன்படி, ஜனவரி 2-ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்தும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலிறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்க உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை தெற்குமாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்தி எம்.எல்.ஏ முன்னிலையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.