Tamil News
Tamil News
Wednesday, 28 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

பொங்கல் பரிசுத் தொகுப்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்புடன் முழுக் கரும்பையும் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ரொக்கப் பணம் அறிவிப்பு

கடந்த 22-12-2022 அன்று வெளியான தமிழ்நாடு செய்திக்குறிப்பில், “2023ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் எடுக்கபப்ட்ட முடிவின்படி, வருகிற 2023ம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கிட முடிவு செய்யட்டது. இதனால் அரசுக்கு 2.19 கோடி குடுமொப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவீனம் ஏற்படும். 

தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 02-01-2023 அன்று சென்னையில் முதலமைச்சரும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டது. 

எதிர்க்கட்சிகள் கண்டனம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், பொங்கல் பொருட்களுடன் கரும்பு வழங்கப்படுவது வழக்கம். அதில் இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் பொங்கல் பரிசுத் தொகுப்பை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அமமுக நிறுவனர் டி.டி.வி. தினகரன், தேமுதின நிறுவனர் விஜயகாந்த் உள்ளிட்ட  தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கரும்பு பயிரிட்ட விவசாயிகளும் தமிழ்நாடு அரசு பொங்கலுக்காக கரும்பு கொள்முதல் செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என  அறிவித்தனர். 

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு

விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களில் கோரிக்கை குறித்து ஆலோசனை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்கெவனே வழங்கப்படுதாக அறிவித்த 1000 ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். 

மேலும் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வு 02-01-2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பார் எனவும், ஜனவரி 03ம் தேதி முதல் 08ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.