Tamil News
Tamil News
Tuesday, 27 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

தைப் பொங்கலுக்கு தமிழக அரசு வேட்டி-சேலை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு

2023 ஆண்டிற்கான பொங்கல் பரிசு தமிழகத்தில் ஜனவரி 2 முதல் வழங்கப்பட உள்ளது.  மொத்தம் 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் பரிசுப் பொருட்களை பெறுவதற்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் பயனாளர்களில் வீடுகள்தோறும் நேரடியாகச் சென்று விநியோக, செய்துவருகின்றனர். 

எடப்பாடி அறிக்கை 

இந்நிலையில், தைப் பொங்கலுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பரிசு பொருட்களில் வேட்டி-சேலை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ தைப் பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு இந்த விடியா திமுக அரச்ய் 1000 ரூ ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவுப்படுத்தி, 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு, பொங்கல் தொகுப்புடன் 5000 ரூபாய் பொங்கல் பரிசும், ஒரு முழு செங்கரும்பும் வழங்க வேண்டும் என்று விடியா அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன். 

https://twitter.com/EPSTamilNadu/status/1608318928950013953?s=20&t=gPn6QEb4Y31dPy7QwC5r2w

மேலும் தைப்பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு செங்கரும்பு வழங்காமல் கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து கழக விவசாய பிரிவின் சார்பில் ரெண்டு ஒன்று 2023 அன்று திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தேன். கரும்பு விவசாயிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு கழகம் வடிகால் அமைப்பதை உணர்ந்த இந்த அரசு கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல் இன்றைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கோரிக்கை வைத்த பொங்கல் பரிசு தொகையான 5,000 ரூபாயையும் வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

”கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன்”

விடியா திமுக ஆட்சியில் கடந்த தைப்பொங்கல் திருநாளுக்கு கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு கரும்புக்கு 32 முதல் 40 வரை அரசு விலை நிர்ணயம் செய்து இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கியும் விவசாயிகளுக்கு போய்ச் சேர்ந்தது. 12 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே இதையும் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனவே வருகின்ற தைப்பொங்கலுக்கு இடைத்தரகர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் கமிஷனுக்காக கரும்பை வாங்காமல் நேரடியாக செங்கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தலைவலி தீர்வதற்குள் வயிற்று வலி வந்த கதையாக கரும்பு பிரச்சனை முடிவதற்குள் விலையில்லா வேட்டி சேலை பிரச்சினை பூதாகரமாக வடிவெடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலை நெய்யும் பணி என்ற ”கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன்” ஆட்சியின் அகோர பசியால் முடங்கிப் போய் இருப்பதாக நெசவாளர்களும் கூட்டுறவு சொசைட்டிகளை சார்ந்தவர்களும் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. 

ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம் தான் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும் டிசம்பர் முதல் வாரத்தில் தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன. மேலும் துணை இணைவதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கியுள்ளதாகவும் துணி நெய்யும் போது தறியில் நைந்து போன நூல் அறிந்து துண்டு துண்டாக விழுவதால் துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர். இதனால் 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும் தரமான நூல் தந்தால் தான் வேட்டி சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதன் காரணமாக வரும் தைப்பொங்கலுக்கு ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்கை உடை என்ற புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் கனவு திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காவிடில் வேலை இழக்கும் நெசவாளர்களையும் ஏமாற்றப்படும் ஏழை எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்.