Tamil News
Tamil News
Wednesday, 28 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. 

ஆர்.டி.பி.சிஆர். பரிசோதனை கட்டாயம்

இந்த நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். பரிசோதனை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். 

அறிக்கை பதிவேற்றம் வேண்டும் 

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர்.பரிசோதனை கட்டாயம் என்றும் பயணத்திற்கு முன் பயணிகள் தங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.