Tamil News
Tamil News
Thursday, 29 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. 

பிரதமர் மோடியின் தாயார் (வயது 100) முதுமையினாலும், உடல்நலக்குறைவாலும் நேற்று முன் தினம்  (28-12-2022) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர். பிரதமர் மோடியும் தனது தாயாரை நேரில் சென்று சந்தித்து அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். 

ஹீராபென் மரணம்

இந்நிலையில் இன்று (30-12-2023) அதிகாலை 3:30 மணியளவில் பிரதமர் மோடியின் தாயார் இயற்கை எய்தினார். பின்னர் அவரது உடல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இறுதி மரியாதைக்காக குஜராத்தின் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 

பிரதமர் அஞ்சலி

குஜராத் விரைந்த நரேந்திரமோடி, தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். மேலும் ஹீராபென்னின் உடல் முன்பாக மண்டியிட்டு கண்கலங்கியபடியே மரியாதை செலுத்தினார் மோடி. 

அரசியல் தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவிற்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் நேரிலும் சமூகவலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்தனர். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், ஜெகன் மோகன் ரெட்டி, பினராயி விஜயன், சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும் இரங்கல் தெரிவித்தனர். 

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அறியப்படும் எடப்பாடி பழனிசாமி, நேரில் சென்று பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இறுதி சடங்கு 

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அவரது தாயாரின் உடலை மயானம் வரை சுமந்து சென்றார். பின்னர் மயானத்தில் தனது தாயாரின் உடலுக்கு அவரது மதத்தின் முறைப்படி சடங்குகளை செய்தார் மோடி. இறுதியில் ஹீராபென்னின் உடலுக்கு தீமூட்டினார். 

அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று மேற்குவங்கத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட உதவிகளை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது தாயார் மறைந்ததால் அவரால் மேற்கு வங்கத்திற்கு செல்ல முடியவில்லை. ஆனால் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டாம் என பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதுடன், தனது தாயாரின் இறுதி சடங்கிற்கு பிறகு குஜராத்தில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங் வழியாக மேற்கு வங்க நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.