Tamil News
Tamil News
Friday, 30 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின் காதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. 

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனீகபூர் தயாரிப்பில், நடிகர்கள் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் பெரும் எதிர்பாப்போடு உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் துணிவு திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 

NO ஆடியோ லாஞ்ச் 

வழக்கமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு விளம்பரம் தேடும் முயற்சியில் பெரிய அளவில் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி நடத்தப்படும். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு ஆடியோ லாஞ்ச் பெரிய அளவில் நடத்தப்ப்படும். மேலும் அந்த படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். ஆனால் நடிகர் அஜித் செய்தியாளர் சந்திப்பிற்கோ, இசைவெளியீட்டு விழாவிற்கோ அல்லது விருது வழங்கும் விழாவிற்கோ வருவதில்லை. இது நீண்ட நாட்களாக அவர் மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தனது உதவியாளர் சுகேஷ் சந்திரா மூலமாக நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

கதாபாத்திரம் அறிமுகம்

இந்நிலையில் இன்று துணிவு படக்குழு அவர்களது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை மைபாவாக மோகனசுந்தரம், பிரேமாக நடிகர் பிரேம், ராஜேஷாக நடிகர் பக்ஸ், கிரிஷாக நடிகர் ஜான் கோகேன், ராதாவாக நடிகர் வீரா, முத்தழகனாக நடிகர் ஜி.எம்.சுந்தர், ராமசந்திரனாக போலீஸ் கதாபாத்திரத்தில் அஜய், தயாளனாக போலீஸ் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி ஆகிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

அஜித் & மஞ்சு வாரியர்

நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் சமூகவலைத்தளத்து குவிந்துவருகின்றனர். இதில் நடிகை மஞ்சு வாரியர் கண்மனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அஜித் கதாபாத்திர அறிமுகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.