Tamil News
Tamil News
Saturday, 31 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. 

ஹெச் வினோத்

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஹெச்.வினோத், தீரன் அதிகாரம் இன்று திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ஆடியன்ஸ் பேஸை உருவாக்கினார். அதனை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை, வலிமை என அஜித்தை வைத்து அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்த அவர், மீண்டும் அஜித்துடன் ‘துணிவு’ படத்தின் மூலம் இணைந்தார். 

இப்படத்திற்கு பெரும் எதிர்பாப்பு உருவாகியுள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் துணிவு திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 

நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை 

வழக்கமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு விளம்பரம் தேடும் முயற்சியில் பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்படும். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு ஆடியோ லாஞ்ச் பெரிய அளவில் நடத்தப்ப்படும். மேலும் அந்த படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். ஆனால் நடிகர் அஜித் செய்தியாளர் சந்திப்பிற்கோ, இசைவெளியீட்டு விழாவிற்கோ அல்லது விருது வழங்கும் விழாவிற்கோ வருவதில்லை. இது நீண்ட நாட்களாக அவர் மீது விமர்சனமாக வைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தனது உதவியாளர் சுகேஷ் சந்திரா மூலமாக நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

கதாபாத்திரம் அறிமுகம்

இந்நிலையில் நேற்று (டிச 30) துணிவு படக்குழு அவர்களது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தனர்.  அந்த வகையில் படத்தின் நாயகி  நடிகை மஞ்சு வாரியர் கண்மனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மைபாவாக மோகனசுந்தரம், பிரேமாக நடிகர் பிரேம், ராஜேஷாக நடிகர் பக்ஸ், கிரிஷாக நடிகர் ஜான் கோகேன், ராதாவாக நடிகர் வீரா, முத்தழகனாக நடிகர் ஜி.எம்.சுந்தர், ராமசந்திரனாக போலீஸ் கதாபாத்திரத்தில் அஜய், தயாளனாக போலீஸ் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி ஆகிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அஜித்தின் கதாப்பாத்திரம் மட்டும் அறிவிக்கப்படவில்லை. நடிகர் அஜித்தின் கதாப்பாத்திரத்திற்கு மட்டும் கேள்விகுறியோடு போஸ்டர் வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மீண்டும் கூட்டியுள்ளது படக்குழு. இதனால் அஜித்தின் காதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் விவாதித்து வருகின்றனர்.

துணிவு டே

இதனைத் தொடர்ந்து துணிவு படத்தின் டிரெய்லர் இன்று மாலை` 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக ஜி ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 

துணிவு படம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆக்சன் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளதாக இயக்குநர் வினோத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.