Tamil News
Tamil News
Sunday, 01 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் அப்டேட்டை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ளார். 

சாகுந்தலம் 

குணசேகர் இயக்கத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள ’சாகுந்தலம்’ படத்தில் நடித்துள்ளார்  நடிகை சமந்தா. மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.  இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தை 3டி உடன் வெளியிடலாம் என்ற யோசனையில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தது படக்குழு. 

இதுகுறித்து படக்குழு வெளியிட்ட அறிக்கையில், “சாகுந்தலம் படத்தை 3-டியில் மாற்ற உள்ளோம்.  இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என படக்குழு அறிவித்திருந்தது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வாரிசு அப்டேட் கொடுத்த சமந்தா

சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அப்போது, நடிகர் விஜயின் ரசிகர் ஒருவர், ” வாரிசு டிரைலர் அப்டேட் குறித்து கடைசில ஹேஷ்டேக் போட்ற அளவுக்கு வச்சிட்டிங்களே… ரிலீஸ் தேதி மற்றும் டிரைலர் எப்போது வரும் என்ற முடிவை சொல்லுங்கள்” என்று கூறி வாரிசு படத்தின் அப்டேட்டை கேட்டார். 

https://twitter.com/Samanthaprabhu2/status/1609822625945260032?s=20&t=gGLd_SlR0eaAIX3qN8o4eA

அதற்கு பதிலளித்த சமந்தா, “நீங்க என்னை குறிப்பிட்டு கேட்டுள்ளதால், நான் அதை கண்டுப்பிடித்துவிட்டேன்.. விரைவில் வாரிசு டிரைலர் வெளியாகும்” என வாரிசு அப்டேட்டை கொடுத்துள்ளார் சமந்தா. 

சமந்தாவின் இந்த வாரிசு அப்டேட் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.