Tamil News
Tamil News
Monday, 02 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

சூர்யா சிவா – டெய்சி சர்ச்சை

திமுகவின் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவா திமுகவில் இருந்து விலகி தமிழக பாஜகவில் இணைந்தார். இதுவே தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சலசலப்பு அடங்குவதற்குள்  பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவரான டெய்சி சரணை ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யாவின் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யா குறித்து பாஜகவை சேர்த காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்திருந்தார். 

காயத்ரி ரகுராம் பதிவு

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், “சொந்தக் கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்... இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநிலப் பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மைச் சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீஸார் கைதுசெய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை, என் ஆறுதல் மற்றும் ஆதரவு" என பதிவிட்டிருந்தார்.

6 மாத சஸ்பென்ஷன்

சொந்த கட்சிமீதான காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியதால், ”காயத்ரி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதால், கட்சியில் அவர் வகித்துவரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்” என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனால் தொடர்ந்து, காயத்ரி ரகுராமை சுற்றி பல்வேறு சலசலப்புகள் தொடர்ந்தன. இந்த நிலையில், திருச்சி சூர்யா சிவாவும், பா.ஜ.க-விலிருந்து வெளியேறினார்.

காயத்ரி ரகுராம் விலகல்

இந்நிலையில், அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். 

 

https://twitter.com/Gayathri_R_/status/1610011788887875585?s=20&t=GBJdnczCoB9GC3sDtImFqA

 

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், ”பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்” என்று பதிவிட்டுள்ளார்.