Tamil News
Tamil News
Monday, 09 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

 ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதமிழ் தமிழ்நாடு பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டப்பேரவையில் சர்ச்சை

தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (09-01-2023) காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது திமுகவின் கூட்டணிக் கட்சிகளான, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழர் வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆளுநர் உரை தொடங்கியவுடன் ஆளுநருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். 

ஏனென்றால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும் என்றும், தமிநாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடம் என்னும் பிற்போக்கு கொள்கை வேரூன்றி உள்ளது எனவும் பேசினார். இதற்கு பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்பட்டு வருகின்றார் என்றும், இந்துவக் கொள்கைகளை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சிக்கிறார் விமர்சித்தனர். 

மேலும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து பதாகைகளை ஏந்தி ஆர்.என்.ரவிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.  

ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் அரசியல் பேசி, பாஜக தலைவரைப் போல செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டிய காங்கிரஸ், தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த இன்றைய ஆளுநர் உரையில் தமிழ்நாடு, திராவிடமாடல் போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு ஆர்.என்.ரவி உரையாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

தமிழ்நாடு பெயரை புறக்கணித்த ஆளுநர்

இந்நிலையில் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு, அம்பேத்கர், காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், பெண்ணுரிமை, சமத்துவம், தமிழ்நாடு அமைதிப் பூங்கா போன்ற வார்த்தைகளையும் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் அவரது விருப்பப்படி சில வரிகளை இணைத்து பேசியுள்ளார். 

முதலமைச்சர் கண்டனம் 

இதனால் ஆளுநர் உரை முடிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் முன்னதாகவே ஒப்புதல் பெறப்பட்டு, அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே சட்டமன்ற குறிப்பில் இடம்பெறும் எனவும், ஆளுநர் தன்னிச்சையாக சேர்த்துக்கொண்ட வரிகளும், வார்த்தைகளும் இடம்பெறாது எனவும் கூறி தீர்மானம் நிறைவேற்றினார். 

வெளிநடப்பு செய்த ஆளுநர்

ஆளுநர் சட்டப்பேரவையில் இருக்கும்போதே, அவருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்ததால், தேசியக் கீதம் இசைக்கப்படும் முன்னரே சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தால் ஆர்.என்.ரவி. 

பொங்கல் விழா அழைப்பிதழ்

இந்நிலையில் இன்று (10-01-2023) காலை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தமிழ் நாடு அரசின் இலட்சினையும் புறக்கணிக்கப்பட்டு, அதற்கு பதிலாக இந்திய அரசின் இலட்சினை இடம்பெற்றிருந்தது.  

ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில், “சென்னை ஆளுநர் மாளிகையில் 2023ம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ம் நாள் வியாழக்கிழமை மாலை நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களும், திருமதி லட்சுமி ரவி அவர்களும் அன்புடன் அழைக்கிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆளுநருக்கு கண்டனம்

இதனால் தமிழ்நாடு அரசின் இலட்சினையை பயன்படுத்தாதற்கும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்ம் விசிக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள், “ஆளுநர் அழைப்பிதழ், கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.