Tamil News
Tamil News
Wednesday, 11 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

கோவை ஈஷா யோகா மையம் விவகாரத்தில் சுபஸ்ரீ மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிகுமார் என்பவரது மனைவி சுபஸ்ரீ. இவர் கோவையில் உள்ள யோக மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று பயிற்சி முடிந்து தனது மனைவி வீடு திரும்பவில்லை என்று பழனிகுமார் புகார் அளித்திருந்த நிலையில், அவர் உயிரிழந்த நிலையில் சுபஸ்ரீ சடலம் மீட்கப்பட்டது. 

இறந்த நிலையில் கிடந்த சுபஸ்ரீ சடலம்

இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது, சுபஸ்ரீ காணாமல் போனதை அறிந்து 19.12.2022 அன்று ஆலந்துரை காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

சுபஸ்ரீ மரணம் குறித்து விசாரணை

ஈஷா மையம் சுபஸ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணிப்பு கேமாராக்கள் பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும் என்றார்.