Tamil News
Tamil News
Sunday, 15 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

22 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

துணிவு வெற்றி

அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் சாதனையை படைத்துள்ளது. விஜய்யின் வாரிசு படத்துடன் வெளியான இப்படம், முதல்நாள் வசூலில் வாரிசு திரைப்படத்தை முந்தியது. 

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கும் படம் AK 62. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள  இத்திரைப்படத்தில் சந்தானம், அரவிந்த் சாமி, அர்ஜுன் தாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய்
 
இந்நிலையில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2000வது ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அப்டேட்

துணிவு திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், AK 62 திரைப்படத்தை பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படமாக AK 62 இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.