Tamil News
Tamil News
Thursday, 19 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்பட சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்துள்ளார். 

பிபிசி நிறுவனம் தயாரித்த ஆவணப்படம்

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அப்போது நரேந்திர மோடி குஜராத்தின் பிரதமராக இருந்தார். இந்நிலையில், லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. முதல் பகுதி, கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. 

கலவரத்தில் தொடர்புடைய மோடி

அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆவணப்படத்தின்ற்கு இந்தியா கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் உசைன் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர்  பி.பி.சி. ஆவணப்படத்தில் கூறப்பட்ட தகவல்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? என்று அவர் கேட்டார். 

மோடி பற்றிய கருத்துகளில் உடன்பாடு இல்லை

இதற்கு பதிலளித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:- எந்த நாட்டில் மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் நாம் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த மோடி பற்றி முன்வைக்கப்படும் அனைத்து கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியுள்ளார். இந்த ஆவணப்படத்தின் 2-வது பகுதி, 23-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள நிலையில், இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.