Tamil News
Tamil News
Thursday, 19 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

ட்ராகன் போல தோற்றமளிக்க விரும்பிய திருநங்கையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

திருநங்கையாக மாறிய வங்கி அதிகாரி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பிறந்தவர் ரிச்சர்ட் ஹெர்னாட்னஸ் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். நாளாடைவில் தனது உடல் ரீதியான மாற்றத்தை உணர்ந்த இவர் திருநங்கையாக தன்னை மாற்றிக்கொண்டார். இந்நிலையில், இவர் தனது பெயரை டைமெட் இவா மெடுசா என மாற்றிக்கொண்டார். பச்சை குத்துவதில் விருப்பம் கொண்ட இவர் டைமெட் இவா தனது உடல் முழுவதும் 'டாட்டூ' குத்திக் கொண்டுள்ளார். 

டிராகன்போல உருமாறிய திருநங்கை

மேலும், 'டிராகன்' போல் காட்சியளிக்க வேண்டுமென எண்ணிய டைமெட் இவா தனது மூக்கு, காதுகளை நீக்க திட்டமிட்டு அதற்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் டிராகன் போல மாற திட்டமிட்ட இவா அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். அதன் விளைவாக தனது நாக்கை பாம்புக்கு உள்ளதுபோல் போல் இரண்டாக வெட்டியுள்ளார். மூக்கு, காதுகளை நீக்கி, நாக்கை இரண்டாக வெட்டி 'டிராகன்' போல் காட்சியளிக்க தொடங்கியுள்ளார். திருநங்கை டைமெட் இவா பாம்பு மீது கொண்ட கனவுகளால் தன் பயணம் தொடங்கியதாகவும் கூறியுள்ளார். இவர் டிராகன் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது