Tamil News
Tamil News
Sunday, 22 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ராகுல்காந்தி

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல்காந்தி 

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பல மாநிலங்களை கடந்த ராகுல்காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது. 

யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி 

இந்தநிலையில், அவர் பாரத் ஜோடோ யாத்திரை போது ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார். அக்கட்சியின் தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில், கேள்வி கேட்கும் நபர், எந்த தருணத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

வருங்கால மனைவி குறித்து ராகுல்காந்தி

அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, சரியான பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். மேலும் பேசிய அவர், எனது பாட்டி இந்திரா தான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் அது போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் தன் பாட்டியின் குண நலன்களோடு இருந்தால் நல்லது என பதில் அளித்துள்ளார். 52 வயதாகும் ராகுல்காந்தி. தற்போது இந்திய ஒற்றுமை யாத்திரையை வலியுறுத்தி ஜம்மு காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.