Tamil News
Tamil News
Friday, 10 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் நடிகர் விஜய் மற்றும் நடிகர் சாரூக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லியோ

நடிகர் விஜய் தற்போது தளபதி 67 படமான லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தில் LCU அதாவது லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் டெக்னிக் பயன்படுத்தப்படலாம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர். வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி, லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, பாக்ஸ் ஆபிசிலும் வாரிசு சக்கைபோடு போடுவதால், தாயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியில் உள்ளது. 

ஜவான் 

நடிகர் சாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகும் முன், பீஷ்ராம் பாடல் சமூக வலைதளத்தில் வெளியானபோது, படத்திற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பதான் படத்தை யாரும் பார்க்க கூடாது, படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மத அடிப்படைவாத கும்பலால் சமூகவலைதளத்தில் பரப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக பதான் திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிசிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சாரூக்கான் தற்போது, தமிழ் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து ஜவான் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜவான் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயக்குநர் சங்கர்

இதைப்போல இயக்குநர் சங்கரும் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன்-2 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த படமும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் பிரமாண்ட திரைப்படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற ஷங்கர், நடிகர் விஜய் மற்றும் ஷாரூக்கானை வைத்து, ஒரு அறிவியல் புனைக்கதை (Science Fiction) திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து, நண்பன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் எந்திரன், எந்திரன்2.0 ஆகிய படங்களும் சங்கரின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. இந்நிலையில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும், நடிகர் விஜய் மற்றும் நடிகர் ஷாரூக்கான் ஆகியோரை வைத்து திரைப்படம் இயக்கினால், நிச்சயமாக அந்த படம் சர்வதேச அளவில் பெரிய வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் விஜய் மற்றும் ஷாரூக்கானை வைத்து சங்கர் இயக்கும் படத்திற்கு 900 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.