Tamil News
Tamil News
Tuesday, 14 Feb 2023 00:00 am
Tamil News

Tamil News

காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில், இந்து முன்னணி அமைப்பினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காதலர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகளவில் காதலர்கள் வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். மேலும் லட்சக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த நாளில் தங்களது காதலையும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக தங்களது காதலி மற்றும் காதலருடன் பூங்கா, கடற்கரை, தியேட்டர், கோவில் என அவரவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வது வழக்கம். அன்பை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் உலகம் முழுவதும் வயது, பாலினம், மதம், இனம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் கொண்டாடப்படுகிறது. 

காதலர் தின எதிர்ப்பு

கடந்த சில ஆண்டுகளாக வட இந்தியாவில் உள்ள, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மத அடிப்படைவாதிகள் பல பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காதலர் தினத்தன்று ஒன்றாக வெளியே வரும் ஆணையும் பெண்ணையும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது, அவர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்துவது போன்ற பல குற்றச்செயல்களை நடத்திவருகின்றனர். மேலும் காதலர் தினம் என்பது மேலை நாட்டு கலாச்சாரம் என்றும் இந்திய கலாச்சாரத்தில் காதலர் தினம் இல்லை என்றும் கூறிவருகின்றனர்.

தமிழகத்தில் நுழைந்த வட இந்திய கலாச்சாரம் 

காதலர் தினத்திற்கு வட இந்திய மாநிலங்களில் மட்டுமே எதிர்ப்பு இருந்த நிலையில் தற்போது தற்போது தமிழ்நாட்டிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மத அடிப்படைவாத அமைப்புகளுள் ஒன்றான இந்து முன்னணி அமைப்பு, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் காதலர் தினத்தன்று காதலர்கள் பூங்கா, கடற்கரை போன்ற பொதுவெளிகளில் சுற்றித்திரிவதும், பொதுவெளியில் நெருக்கமாக இருப்பதும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறியுள்ளனர். 

பசுவை கட்டிப்பிடியுங்கள்

இதுமட்டும் அல்லாமல், காதலர் தினத்தன்று, பசுவை அனைவரும் அரணைப்போம் என்று மத்திய விலங்குகள் நல வாரியம் அறித்தது, ஆனால் இதற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த அறிவிப்பு கைவிடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் காதலர் தினத்தன்று பசுவை கட்டிப்பிடிக்கும் நிகழ்வு நடைபெறும் என இந்து முன்னணி அமைப்பின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார்.