Tamil News
Tamil News
Wednesday, 15 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னினையில் உள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலானது, உள்கட்சி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என இரண்டு வகையில் நடைபெறும். அதாவது அமெரிக்காவில் இருகட்சி ஆட்சி முறையே நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என இரு கட்சிகள் மட்டுமே அமெரிக்காவை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக அதிபர் வேட்பாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் பெரும்பான்மை வாக்குகளை பெற வேண்டும். அதாவது குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள், முதலில் அதிபர் தேர்வுக்காக உட்கட்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களின் ஓட்டுகளை பெற்று வெற்றிபெற வேண்டும். குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இதுவே நடைமுறை. 

குடியரசு கட்சி தேர்தல்

அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவினார். 2016 முதல் 2020 வரை டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தின் ஆளுநர் ரோன் டி ஸ்டேனிஸ், தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹேலி மற்றும் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர். 

இந்த பிப்ரவரி மாதம் 6 முதல் 13 வரை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 43 சதவீத வாக்குகளும், ரோன் டி ஸ்டேனிஸ் 31 சதவீத வாக்குகளும், நிக்கி ஹேலி 4 சதவீதம் மற்றும் மைக் பென்ஸ் 7 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

இதனால் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அல்லது ரோன் டி ஸ்டேனிஸ் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.