Tamil News
Tamil News
Monday, 20 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கபூர்வமான சிந்தனையை குழந்தைகள் மத்தியில் உருவாக்க முடியும் என்று இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். தாய்மொழியின் சிறப்புக் குறித்து முன்வைக்கப்பட்ட இக்கருத்துகள் தாய்மொழியின் அவசியத்தை நோக்கி உலகைச் சிந்திக்கவும் திசைதிருப்பவும் வைத்துள்ளன.

தாய்மொழி தினம் உருவான கதை

ஐ.நாவின் யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21 ஆம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாகப் பிரகடனம் செய்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிந்தது. மேற்கு பாகிஸ்தான் இப்போதைய பாகிஸ்தான் ஆகும். கிழக்கு பாகிஸ்தான் தற்போதைய வங்கதேசம் என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு பாகிஸ்தானின் மொழியாக வங்க மொழி இருக்க வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்-21ல் வங்கமொழி இயக்கம் உருவானது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் 1952 இல் மொழிப் பாதுகாப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பிப்ரவரி 21 இல் நடந்தது. மொழிக்காக முதன் முதலில் உயிர்நீர்த்த இத்தினத்தை சர்வதேச தாய்மொழி தினமாக ஆக்க வேண்டுமென வங்கதேச அறிஞர் ராஃபிக்குல் இஸ்லாம் ஐ.நா வுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அக்கோரிக்கைக்கு யுனெஸ்கோ நிறுவனம் 2000 ஆம் ஆண்டு கொடுத்த அங்கீகாரமே சர்வதேச தாய்மொழி தினமாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மறைமலையடிகள் ஆரம்பித்த தனித்தமிழ் இயக்கம் வரலாற்றுக் காலங்கள் முதலே தமிழ் இலக்கியத்திற்கென புலவர்களும் மன்னர்களும் ஆற்றிய பங்களிப்புக்கள் எல்லாமே தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்றன. 'தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாடிச் சென்ற பாரதிதாசனின் வரிகள் நம் உள்ளங்களை உசுப்பும் போது தமிழனின் நரம்புகள் புடைக்கும். ஐரீஸ் நாட்டறிஞர் வோலரா குறிப்பிடும் போது 'ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதற்குப் பெரும் படை பலம் தேவையில்லை. அந்நாட்டின் தாய்மொழியை சிதைக்கத் தொடங்கினால் போதும்' என்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவு

சர்வதேச தாய்மொழி தினத்தில் தாய்த்தமிழ் மொழியின் பெருமையை வெளிப்படுத்தியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவு
தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் - உயிர்!
உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!
தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!

https://twitter.com/mkstalin/status/1627874870758633473?s=20

மநீம தலைவர் கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு

மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்.

http://https://twitter.com/ikamalhaasan/status/1627894782432534531?s=20