Tamil News
Tamil News
Wednesday, 22 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள் காலியாக இருப்பதாக கடந்த ஆண்டு மாநிலங்களவை அறிவித்திருந்தது. அப்போது திமுகவிற்கு 4 எம்.பி. பதவியும், அதிமுகவிற்கு  2 ராஜ்ய சபா எம்.பி. பதவியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இரட்டைத் தலைமை கொண்ட அதிமுகவில், தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு சீட்டும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி தரப்புக்கு ஒரு சீட்டும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது. எந்த தேர்தலாக இருந்தாலும் வேட்பாளர்களை முந்திக்கொண்டு அறிவிக்கும் அதிமுக, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வந்ததற்கு காரணம், இரட்டை தலைமையில் இயங்கி வந்ததுதான்.

இந்த நிலையில் அதிமுக சார்பில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. காரணம், இரட்டைத் தலைமை கொண்ட அக்கட்சியில், தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு சீட்டும், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி தரப்புக்கு ஒரு சீட்டும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது. எந்த தேர்தலாக இருந்தாலும் வேட்பாளர்களை முந்திக்கொண்டு அறிவிக்கும் அதிமுக, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்தது. காரணம், இரட்டைத் தலைமை, முக்குலத்தோர், வன்னியர் இடையேயான போர் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும், மூத்த கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்ததால் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் தலைமை இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஆரம்பிக்கப்பட்ட இரட்டை தலைமை விவகாரம் தான் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிண்ணணியாக, அதிமுகவில் உள்ள இளைஞர்களின் ஆதரவு இபிஎஸ்-க்குதான் உள்ளது. நான்கு ஆண்டுகள் முதல்வராக அவர் ஆட்சி செய்தபோது, கொரோனா காலத்திலும் சரி, புயல் மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நேரத்திலும் சரி, மக்களை நேரில் சென்று சந்தித்தார். எளிமையான முதல்வராக இருந்தார் என்பதால், கட்சியிலும், மக்கள் மத்தியிலும் அவருக்குதான் செல்வாக்கு உள்ளது. இதை புரிந்துகொண்டு ஓபிஎஸ் ஒற்றைத்தலைமைக்கு ஒத்துப்போவதுதான் சரியாக இருக்கும் என்றார் முன்னாள் அமைச்சர் சிவபதி.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது முதல்வராக எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும் பதவி வகித்து வந்தனர். கட்சியில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமை ஏற்று செயல்பட்டு வந்தனர். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை, ஓபிஎஸ்-இபிஎஸ் எல்லா முடிவுகளையும் இணைந்துதான் எடுத்தனர். சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளதாகவும் பல மாவட்ட செயலாளர்கள் ஒற்றைத் தலைமை என்ற முடிவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து எழுப்பபட்டு வந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஓபிஎஸ் இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவுற்றது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது சரியான தலைமை இல்லாமல் போனதால்தான் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது, ஆகையால் அதிமுக கட்சியை வழிநடத்துவதற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் மத்தியில் கோஷம் எழுப்பப்பட்டது. இதன் எழுச்சியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம்  அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிவித்திருந்தனர். பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரும்போது ஒற்றை தலைமை முழக்கங்களை எழுப்பினர். ஓபிஎஸ் மேடையில் வந்து அமர்ந்த பிறகு, அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகின்றன என்று ஆக்ரோஷமாக அறிவித்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் . அதேபோல கே.பி. முனுசாமியும் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். மேலும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடும் என தமிழ் மகம் உஷேன் அறிவித்திருந்தார். 

அடுத்தபடியாக ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்திருந்தனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் அமர்வில் முறையிட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு சரியா தவறா என்று, இன்று(பிப்23) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளதாக செய்திகள் வந்தது. இன்று நடைபெற்ற தீர்ப்பில் இபிஎஸ் தான் உண்மையான அதிமுக என்றும், ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்படலாம் என்றும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், உள்ளிட்டோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு அதிமுக விவகாரத்தை முடித்து வைத்துள்ளது.