Tamil News
Tamil News
Sunday, 26 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று ( பிப்-27 ) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு கல்லு பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் உள்ள நகராட்சி பள்ளியில் தனது வாக்கினை திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மன் பள்ளி வாக்குபதிவு மையத்தில் 96வது வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தனது மனைவி ப்ரிதிஷாவுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.