Tamil News
Tamil News
Sunday, 26 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் இன்று (பிப்- 27) சட்டசபை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்தநிலையில், இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், கடந்த சனிக்கிழமையுடன்(பிப்-25) பரப்புரை ஓய்ந்த நிலையில் இன்று இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

மேகாலயா

60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. மேகாலயாவில் 3,419 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்கு 21.4 லட்சம் வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.   

நாகலாந்து

அதேபோல், 60 தொகுதிகளைக் கொண்ட நாகலாந்தில் அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில், 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று ஒரே கட்டமாக 60 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. நாகலாந்து மாநிலத்தில் 13.17 லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு தகுதி வாய்ந்த வாக்காளர்களாகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 2,291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்திலும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் நடக்கும் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

வாக்குப்பதிவு நிலவரம்

மேகாலயா மாநில சட்டசபைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 44.73% வாக்குகள் பதிவாகி உள்ளது. நாகாலாந்து மாநில சட்டசபைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 57.06% வாக்குகள் பதிவாகி உள்ளது.