Tamil News
Tamil News
Monday, 27 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

தமிழக அரசின் 2023-2024-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தனியாக தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில், 2023-2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சட்டப்பேரவைத் தலைவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழக சட்டப்பேரவையில் 2023-2024-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரும் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். 

மார்ச் 28-ம் தேதி, 2023-2024-ம் ஆண்டுக்கான முன் பணமானியக் கோரிக்கை மற்றும் 2022-2023-ம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கை ஆகியவற்றையும் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். 

மார்ச் 20-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கும். மேலும், மானியக் கோரிக்கை உள்ளிட்டவை குறித்தும், வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்தும் அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும். 

தமிழக நிதிநிலை அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுதவிர, பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பழைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.