Tamil News
Tamil News
Wednesday, 01 Mar 2023 11:30 am
Tamil News

Tamil News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்தநிலையில், 27-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் 2-வது சுற்றில் 17477 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

அடுத்ததாக, அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,598 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 1,479 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருக்கிறார்.

அடுத்தபடியாக, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 206 வாக்குகள் பெற்றிருக்கிறார். 
 
இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

இரண்டாவது சுற்றில் மேற்குறிப்பிட்ட வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது சுற்று ஆரம்பிப்பதில் தாமதம் என தெரிவிக்கப்படுகிறது.