Tamil News
Tamil News
Friday, 03 Mar 2023 11:30 am
Tamil News

Tamil News

சென்னையில் இன்று (மார்ச்-04) புற்றுநோய் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஈரோடு கிழக்குத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார். நான் அதை ஒப்புக்கொள்கிறேன். மோசடி செய்து வெற்றி பெறுவது தான் திராவிட மாடல். ஈரோட்டில் நடந்தது தேர்தல் அல்ல திள்ளுமுள்ளு. இதை நானாக சொல்லவில்லை, ஈரோடு கிழக்கில் நடந்ததை சமூக வலைதளங்களில் மூலம் படமாக பார்த்தோம். அங்கு நடந்தது ஜனநாயகத்திற்கு அவமானம் என்று கருத்து தெரிவித்தார்.  

மேலும், பிரதமரையும் ஜெயலலிதாவையும் கொச்சையாக பேசியவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இப்படிப்பட்ட ஒரு நபர் சட்டமன்றத்திற்கு செல்வது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுணிவு என்றார்.

நேற்றைய தினம் காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் முன் யோசனையுடன் செயல்படுகிறார் என்று திருமாவளவன் பேசியதை சுட்டிக்காட்டி பேசிய எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் ஒரு தொகுதியும், இரண்டு தொகுதிகளையும் பெற்றிருக்கும் நிலையில், இந்த காங்கிரஸ் மண்குதிரையை நம்பி, முதல்வர் முன்யோசனையுடன் செயல்படுகிறார் என்று திருமாவளவன் போன்ற குருட்டு பக்தர்கள் தான் சொல்ல முடியும். 

தொடர்ந்து திருமாவளவனைப் பற்றி பேசிய எச்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு மாவட்டத்தில் கூட இல்லாத கட்சி. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில், அவருக்கு என்ன கொள்கை இருக்கு, சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் என்று கடுமையாக சாடியிருக்கிறார். டெல்லியில் இருந்துகொண்டு தென்மாவட்டங்களை கொளுத்துவேன் என்று பேசியவர் திருமாவளவன்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்றைய தினம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக செயல்படுகிறது என்று பேசி வீடியோ வெளியிட்ட நிலையில், அதற்கு, தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று சொல்லுவது பித்தலாட்டம். தமிழ்நாட்டில் கள்ளுகடை திறந்து வைத்து தமிழர்களை குடிக்க வைத்து தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழித்தவர்கள் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று சொல்லலாமா என்று கேள்வி எழுப்பினார். 

வடமாநில தொழிலாளர்கள் பற்றி பேசிய எச்.ராஜா, வடமாநிலத்தவர்களை இங்குள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள் அவர்களுக்கு இரயில் டிக்கெட் புக் செய்து அழைத்து வருகிறார்கள். அது புரியாமல் சீமான் போன்ற ஆட்களெல்லாம் பேசி வருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் என்று பேசி இருக்கிறார்.