Tamil News
Tamil News
Monday, 06 Mar 2023 11:30 am
Tamil News

Tamil News

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் நாது சிங் (85) இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவருக்கு ஒரே மகன் சஹாரன்பூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 4 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. 

மனைவி காலமானதால் சொந்த வீட்டிலேயே நாது சிங் தனியாக வசித்து வந்தார். இவருக்கு கிராமத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு, விவசாய நிலங்கள் உள்ளன. மகனும், மகள்களும் பராமரிக்காத்தால் முதியோர் இல்லத்தில் நாது சிங் சேர்ந்தார். அங்கும் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் மனமுடைந்த நாது சிங் உயில் எழுதி அதை சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து நாது சிங் கூறியதாவது; 

எனக்கு இப்போது 85 வயதாகிறது. என்னுடைய இந்த வயதில் நான் மகன், மருமகள், பேரக்குக்குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் என்னை பராமரிக்கவில்லை. உதாசீனம் செய்தனர். எனவேதான் தனது பெயரில் உள்ள ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை உத்தரப்பிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளேன். மேலும் அந்த உயிலில், எனக்குச் சொந்தமான நிலத்தில் அரசு மருத்துவமனை அல்லது பள்ளிக்கூடம் கட்டிக்கொள்ளலாம் என்றும், எனது மரணத்திற்குப் பிறகு எனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தானமாகக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

நாது சிங் எழுதி வைத்துள்ள உயில் எங்களிடம் வந்து சேர்ந்துள்ளது. சட்டப்படி அவருடைய உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்குப் பிறகு அரசு சட்டப்படி அவரது சொத்துகளை எடுத்துக்கொள்ளும் என்று அங்குள்ள சார் பதிவாளர் தெரிவித்தார்.