Tamil News
Tamil News
Thursday, 09 Mar 2023 11:30 am
Tamil News

Tamil News

பாஜகவுக்கு பின்னடைவு

நான்கு முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்த புட்டண்ணா நேற்றைய தினம் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்ததையடுத்து, ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

நவம்பர் 2020-ல் பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திரு. புட்டண்ணா சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளநிலையில், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்.  

சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், மாநிலத்தில் ஆசிரியர்களின் பிரச்சனைகளை பாஜக அரசு தீர்க்கவில்லை என்று பேசினார். இதற்கு முன் புட்டண்ணா பேரவையின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.

கர்நாடகா சட்டசபைத் தேர்தல்

பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பின்னர், புட்டண்ணாவுக்கு பெங்களூருவில் உள்ள ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஊரக மற்றும் ராமநகரா மாவட்டங்களை உள்ளடக்கிய ஆசிரியர் தொகுதியிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகாவில் 2023 சட்டசபைத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ளநிலையில், புட்டண்ணாவை பெங்களூருவில் உள்ள ராஜாஜிநகர் அல்லது யஷ்வந்த்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுர்ஜேவாலா பாராட்டு

"40 சதவீத சர்க்காரா மற்றும் இளைஞர்களுக்கு எதிரான, ஆசிரியர் விரோதக் கொள்கைகளால், பாஜக சட்ட மேலவை உறுப்பினரான புட்டண்ணா இன்று சட்ட மேலவை உறுப்பினர் பதவி மற்றும் பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவருக்கு இன்னும் 4 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினர் பதவி உள்ளது. அவரது துணிச்சலான நடவடிக்கைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கர்நாடகா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.