Tamil News
Tamil News
Friday, 10 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

வடமாநில தொழிலாளர் விவகாரம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது பற்றியான வதந்திகள் இந்தியா முழுவதும் பரவலாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பெருநகரங்களில் பெருவாரியாக வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். அவ்வப்போது, ஒரு சில இடங்களில் தமிழர்களால் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை தாக்குவது போன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது தமிழ்தேசியவாதிகளால் வடமாநில தொழிலாளர்கள் பற்றி வெறுப்பு பரப்புரை செய்ததையடுத்து பீகார் சட்டப்பேரவையில், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பேசியது, என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் விஷ்வரூபம் எடுத்திருந்தது.

வீடியோவை வெளியிடுவேன்

இதுதொடர்பாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும், இது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் கூறி வந்தார். பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் வகையில் ஜன் சுராஜ் என்ற பெயரில் மூவாயிரம் கிலோ மீட்டர் நீள பாதயாத்திரையை தொடங்கி பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார். 

சில பத்திரிகையாளர்கள் போலி வீடியோக்களை பகிர்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள பிரசாத் கிஷோர் நடந்த சம்பவங்களின் உண்மைகளில் இருந்து யாரும் விலகி செல்லக் கூடாது என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் பீகார் முதல் மந்திரி நிதீஷ்குமார் முழுப்பொறுப்பையும் அதிகாரிகளிடம் விட்டுவிட்டதாகவும், தமிழ்நாடு முதல் அமைச்சருடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும் கூறிய பிரசாந்த் கிஷோர், சொந்த மாநில மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் கொண்டாடியதாகவும் விமர்சித்திருந்தார்.

பிரசாந்த் கிஷோர் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பான வீடியோவை வெளியிடுவேன் என்று கூறியிருந்தநிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சீமான் பேசிய காணொளி மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவரை தமிழர் ஒருவர் ரயிலில் தாக்கிய காணொளிகளை தற்போது வெளியிட்டிருக்கிறார். 

சீமானை கைது செய்ய கோரிக்கை

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில், சீமான் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பேசிய வீடியோவை குறிப்பிட்டு, வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவரையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஏன் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையால் பிப்ரவரி 16 அன்று ஒரு வீடியோ பகிரப்பட்டது. அந்த வீடியோவில் ரயிலில் வடமாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குவது போன்ற காட்சி இருந்தது. தாக்கப்பட்டது தொடர்பாக, எப்ஐஆர்-ன் நிலை குறித்தும் தமிழக டிஜிபி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.