Tamil News
Tamil News
Friday, 10 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (மார்ச்-10) திறந்துவைத்தார். பின்னர், 75அடி உயரமுள்ள கம்பத்தில் பாஜக கொடியினை ஏற்றி வைத்தார். காணொலி மூலம் தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் பாஜக தேசிய தலைவர் நட்டா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அவர்;

வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது

மாநில கட்சிகள் எல்லாம் தற்போது குடும்ப கட்சிகளாக உள்ளன. காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின. ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது என்று பேசினார். 

40 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் பாஜக 9 ரயில்வே திட்டங்களை கொடுத்துள்ளது. 40 ஆண்டுகாலம் ஆண்டவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தனர் என கேள்வி எழுப்பினார். 

தமிழகத்தில் தாமரை விரைவில்  மலரும்

மாநில கட்சிகள் எல்லாம் குடும்ப கட்சிகளாக உள்ளன. ஜம்மு காஷ்மீர், பீகார், மற்றும் தெலுங்கானாவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். இன்னும் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை, தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். ஆகவே தமிழகத்தில் தாமரை விரைவில்  மலரும் என்று உறுதியுடன் கூறினார்.