Tamil News
Tamil News
Friday, 10 Mar 2023 11:30 am
Tamil News

Tamil News

சிவகங்கை நகரில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு விமான ஓடுதளத்தில் இருந்து பேருந்து மூலம் வெளியே வரும்போது பேருந்தில் இருந்த சகப்பயணி, துரோகி எடப்பாடியாருடன் பயணிக்கிறேன், சின்னம்மா சசிகலாவிற்கு துரோகம் செய்தவர், 10.5% இடஒதுக்கீடு கொண்டு வந்து, தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்” என பேசினார். பின்னர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் பயணியிடம் இருந்த செல்போனை பறித்து, விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 

விமான நிலைய போலீசார் அவரைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவர் பெயர் ராஜேஷ் என்பதும், அவர் வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் சொந்த நாட்டிற்கு வந்ததும் தனது சர்ச்சை பேச்சால் தற்போது அந்த இளைஞர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறையிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யபட்ட ராஜேஷ், டிடிவி தினகரன் நடத்திவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு நிர்வாகியாக பணி செய்வதாக தெரிவித்துள்ளார்.