Tamil News
Tamil News
Sunday, 12 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தேர்வில் 23,747 தனித் தேர்வர்களும், 5,206 மாற்றுத் திறனாளி தேர்வர்களும், 90 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். 

தமிழகத்தில் 3,185 தேர்வு மையங்களில் 8,36,593 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 180 தேர்வு மையங்களில் 45,982 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

புதுச்சேரியில் 40 தேர்வு மையங்களில் 14,710 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 281 வினாத்தாள் மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

3,100 பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்கானிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் வைத்துக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களைப் பார்த்து எழுத முயற்சித்தல், பிறரைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள் பரிமாற்றம், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தண்டனை விதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.