Tamil News
Tamil News
Sunday, 12 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போது எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார். 

மனுக்கள் காலாவதியாகிவிட்டன

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ல் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடந்த வழக்கு இன்று (மார்ச்-13) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன் காரணமாக, மனுக்கள் காலாவதியாகிவிட்டன என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கால அவகாசம் வேண்டும்

அதற்கு, இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பதவிகள் காலாவதியானதா என்பது பற்றி நிலுவை மனுவில் தான் தெரியும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது எனவும் ஓபிஎஸ் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து மேலும் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.