Tamil News
Tamil News
Tuesday, 14 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

மகளிர் ப்ரீமியர் லீக் 11-வது போட்டி

மகளிர் ப்ரீமியர் லீக் 11-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் நேற்று (மார்ச்-12) நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி, அதிகபட்சமாக  எல்லிஸ் பெர்ரி 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. 

151 ரன் இலக்கு

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  டெல்லி கேபிடல்ஸ் அணி வீராங்கனைகள் மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மாவின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அதன் பிறகு களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் பொறுப்புடன் ஆடி டெல்லி  அணியை  வெற்றி  அடையச் செய்தனர்.

தொடர் தோல்வியில் ஆர்சிபி

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸர் மற்றும்  பவுண்டரி  அடித்து டெல்லி அணியை வெற்றி அடைய செய்த ஜெஸ் ஜோனாசென்,  "பிளேயர் ஆப் தி மேட்ச்" விருதை பெற்றார். இதன்மூலம் நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆடவர் ஆர்சிபி அணி போலவே சிறப்பான அணி அமைந்தும் வெற்றி பெறமுடியவில்லை என  ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.