Tamil News
Tamil News
Tuesday, 14 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

மகளிர் பிரீமியர் லீக் 12-வது போட்டி

மகளிர் பிரீமியர் லீக் 12-வது போட்டி நேற்று (மார்ச்-14) மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் ஜெய்ண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெய்ண்ட்ஸ்  அணி பவுலிங் தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை யாஸ்திகா பாட்டியா சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். அதன் பிறகு, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின்  கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக விளையாடி  அரைசதம் அடித்தார். நடாலி ஸ்கிவர்-பிரண்ட் அவருடன் இணைந்து 31 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஆஷ்லே கார்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்  வீழ்த்தி அசத்தினார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

163 ரன்கள் இலக்கு

163 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய  குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே பேட்டிங்கில் சொதப்பியது. தொடக்க வீராங்கனையான சோபியா டங்க்லி எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீராங்கனையான சபினேனி மேகனா 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா மற்றும் ஆஷ்லே கார்ட்னர்  ஆகிய இருவரும்  ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 

முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ்

குஜராத் ஜெய்ண்ட்ஸ் கேப்டன் சினே ராணாவால் அதிகபட்சம் 20 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மற்றும்  ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றி அடைய செய்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

இதன்முலம்  மும்பை இந்தியன்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய  5 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று தொடர்ந்து தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது