Tamil News
Tamil News
Wednesday, 15 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் அமெரிக்காவின் ட்ரோன் பறந்ததால் வெடித்த மோதல்


சர்வதேச சட்டப்படி ட்ரோன் பறக்கும்  - அமெரிக்கா

கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது. ரஷியா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த பகுதியில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததால் கோபமடைந்த ரஷியா அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சர்வதேச ஒப்பந்தத்தை ரஷியா மீறி உள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவிடம் அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்தது. அதே சமயம், சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. 

பதிலடி கொடுத்த ரஷ்யா

இந்த நிலையில், அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு எதிர்காலத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா கூறியுள்ளது. இது குறித்து ரஷியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷாய்கு கூறுகையில், "ரஷிய எல்லைக்கு அருகில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததைப் போல், எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.