Tamil News
Tamil News
Thursday, 16 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

டெல்லி கேபிடள்ஸ் Vs குஜராத் ஜெயிண்ட்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று(மார்ச்-16) நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியும் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும்  குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய  குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை சோஃபியா டங்க்லி 4 ரன்களில் ஆட்டமிழந்தார் , மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் சிறப்பாக  பேட்டிங் செய்து 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் இணைந்து ஆடிய ஹர்லீன் தியோல் 33 பந்துகளில் 31 ரன்கள் அடித்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னெர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இறுதியில், குஜராத் ஜெயிண்ட்ஸ்  20 ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுத்தது.

இலக்கு

பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெல்லி கேபிடள்ஸ் அணியில் அதிகபட்சமாக  மேரிஸன் கேப் 36 ரன்கள் அடித்தார். ஷஃபாலி வெர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அலைஸ் கேப்ஸி 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற முயற்சி செய்தார். ஆனால், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் பந்துவீச்சை கணிக்க முடியாமல் திணறினர். கிம் கார்த், தனுஜா கன்வர் மற்றும்  ஆஷ்லே கார்ட்னர் தலா  2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். 

தரவரிசை பட்டியலில் முன்னேற்றம்

18.4 ஓவரில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. இதன்மூலம், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தரவரிசைப் பட்டியலில் கடைசியிடத்தில் இருந்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 4-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.