Tamil News
Tamil News
Monday, 20 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

* வரும் நிதியாண்டில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்.

* நடப்பு நிதியாண்டில் புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்

* இந்தாண்டு முதல்வரின் முகவரி திட்டத்தில் 17.7 லட்சம் மனுக்களில் 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு - நிதியமைச்சர்.

* சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் இலவச வைஃபை வசதி.

* ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் 2 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன்மூலம் 32,000 பெண்களுக்கு வேலை கிடைக்கும்.

* சேலத்தில் 880 கோடியில் 119 ஏக்கரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்

* விருதுநகரில் 1,800 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

* 20 கோடியில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் நிறுவப்படும்.

* 2024 ஜனவரி 10,11-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும்.

* நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பத்திரப்பதிவுக் கட்டணம் 4%ல் இருந்து 2% ஆக குறைப்பு.

* 2023-2024-ல் அரசின் மொத்த வருவாய் ரூ.2,70,515 கோடியாக இருக்கும்.

* நில வழிகாட்டி மதிப்பை 2017 ஜூனில் கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டு மதிப்பிற்கு ஈடாக உயர்த்த முடிவு. வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தை பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இனி வழிகாட்டி மதிப்பில் 5% முத்திரைத்தீர்வை, சொத்து மாற்று வரி 2% பதிவுக் கட்டணம் 2% செலுத்த வேண்டும்

* மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்கு ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வரும் செப்டம்பர் மாதம் முதல்  வழங்கப்படும் - நிதியமைச்சர்

* அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஆண்டிலும் புத்தக கண்காட்சி தொடர்ந்து 10 கோடியில் நடத்தப்படும்.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு.

* இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு 3,959 புதிய வீடுகள் கட்ட ரூ.223 நிதி ஒதுக்கீடு

* மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு.

* சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.

* கிண்டியில் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டே திறக்கப்படும்.

* குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்கு தயாராக 1,000 மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும்.

* மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும்.

* 711 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவ திட்டம் விரிவுப்படுத்தப்படும் .

* 25 இடங்களில் நாட்டுப்புற, கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 

* வயது முதிர்ந்த மேலும் 591 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை.

* புலம் பெயர்ந்தவர்களுக்கும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் சிகிச்சையளிக்கப்படும்.

* தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்

* ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவு புதியதாக அமைக்கப்படும்.

* சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 500 கோடியில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் மேம்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டை சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இரு மடங்காக 40 லட்சமாக உயர்வு.

* சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

* குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு.

* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்த 40 கோடி ஒதுக்கீடு

* அம்பேத்கரின் படைப்புகள் 5 கோடியில் தமிழில் மொழி பெயர்க்கப்படும்

* பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்.
 
* வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்

* சென்னை அம்பத்தூரில் இளைஞர்களுக்கான நவீன வசதிகளுடன் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

* ரூ.110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம்

* கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள சிப்காட் மேம்படுத்தப்படும்

* நடப்பு ஆண்டில் தமிழக உயர்கல்வித்துறைக்கு 6967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டத்திற்கு 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் 25 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் 100 கோடியில் ஆதி திராவிடர் மாணவர் நல விடுதிகள் அமைக்கப்படும்

* புதிரை வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க 10 கோடி அளிக்கப்படும்.

* நகர்ப்புற பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

* 54 அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்

* 15 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் வரும் ஜூம் மாதம் பயன்பாட்டுக்கு வரும்

* முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்திற்காக 5,145 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த 2,000 கோடி ஒதுக்கீடு

* கிராமப்பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள், 800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்

* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்டம் 7,145 கோடியில் செயல்படுத்தப்படும்.

* கோவையில் செம்மொழிப் பூங்கா 172 கோடியில் நிறுவப்படும்

*ஈரோடு அந்தியூரில் 80,567 ஹெக்டேர் பரப்பில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்

* விழுப்புரம் மரக்காணத்தில் 25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.

* கட்டட வரைபடம், மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம் உருவாக்கப்படும்.

* தெருநாய்களுக்கான இனவிருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்க 10 கோடி ஒதுக்கீடு

*  வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பணிமனைகளை தரம் உயர்த்த 1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*  நடப்பு நிதியாண்டில் தமிழக போக்குவரத்துத்துறைக்கு 8,056 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 1000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க 500 கோடி ஒதுக்கீடு.

* மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கு 2,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

* மாணவர்கள் இலவச பேருந்து பயண மானியத்துக்கு 1,500 கோடி, டீசல் மானியத்துக்கு 2,000 கோடி ஒதுக்கீடு

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பட்ஜெட்டில் 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கோவை அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் 9,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

* மதுரையில் 8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

* மாதம் 1,000 வழங்கும் திட்டத்தால் கடந்தாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 29% உயர்வு. கடந்தாண்டை விட கூடுதலாக 20,477 மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

* ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களுக்கான மானியம் வழங்க 10,500 கோடி ஒதுக்கீடு

* விவசாயக் கடன் தள்ளுபடிக்கு 2,393 கோடி ஒதுக்கீடு

* நகைக்கடன் தள்ளுபடிக்கு 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு 16,262 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

* பாக். வளைகுடா பகுதியில் 79 கோடியில் 217 செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும்.