Tamil News
Tamil News
Monday, 20 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

கன்னட நடிகர் சேத்தன் அகிம்சா என்று அழைக்கப்படும் சேத்தன் குமார் இந்துத்துவா குறித்து சர்ச்சை பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அவர் செய்த ட்வீட் வைரலானதையடுத்து பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் "இந்துத்துவா பொய்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

சாவர்க்கரின் கருத்து பொய்

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது. ராவணனை வீழ்த்தி, ராமன் அயோத்தியா திரும்பியதில் இருந்து இந்திய நாடு என்பது தொடங்குகிறது என்ற சாவர்க்கரின் கருத்து ஒரு பொய். 

1992 பாபர் மசூதியே ராமரின் பிறப்பிடம் என கூறியது ஒரு பொய். 2023 உரிகவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோரே திப்புவை கொன்றவர்கள் என்றதும் ஒரு பொய் என அவர் தெரிவித்து உள்ளார். அதில் கடைசியாக, இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த முடியும். சமத்துவம் என்பதே உண்மை என அவர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

கைது

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகக் பதிவிட்டிருக்கிறார் என்று கூறி, பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்து உள்ளார். பின்னர், பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசார் கைது செய்தனர். தலித் மற்றும் பழங்குடியினர் ஆர்வலரான நடிகர் சேத்தன் குமார் தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

இவர் ஏற்கனவே, பிப்ரவரி 2022-ல், ஹிஜாப் வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் மீது ஆட்சேபனைக்குரிய கருத்து பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.