Tamil News
Tamil News
Wednesday, 22 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களை LGBTQ சமூகத்தவர் என அடையாளப்படுத்திக்கொள்வது குற்றம் என புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றியுள்ளது உகாண்டா அரசு. தன்பாலின உறவை ஊக்குவிப்பதையும், உறவில் ஈடுபடுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது.

கிரிமினல் குற்றம்

தன்பால் ஈர்ப்பு போன்ற LGBTQ பாலினத்தவர்களாக காட்டிக்கொள்வது கிரிமினல் குற்றம் என அறிவித்திருக்கிறது உகாண்டா அரசு. இது தனி மனித உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது என மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. தன் பாலின ஈர்ப்பாளர்களை எதிர்க்கும் நாடுகளில் ஒன்று உகாண்டா. இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் உறவு சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், இச்சமூகத்திற்கு எதிராக புதிய கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கிறது உகாண்டா அரசு.

இச்சட்டத்தை மீறினால் மரண தண்டனை

ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களை LGBTQ சமூகத்தவர் என அடையாளப்படுத்திக்கொள்வது குற்றம் என புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றியுள்ளது. தன்பாலின உறவை ஊக்குவிப்பதையும், உறவில் ஈடுபடுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது. இச்சட்டத்தை மீறினால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது 20 அண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதும், குற்றவாளி எச்.ஐ.வி. பாசிட்டிவ்-ஆக இருக்கும் பட்சத்தில் அதிகபட்ச தண்டனைக்குரிய குற்றமாக அது கருதப்படும். தன்பாலின ஈர்ப்பாளர்கள் பாரம்பரியத்தை அச்சுறுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனை கிரிமினல் குற்றம் என அறிவித்தது சரியான நடவடிக்கை என சட்டத்தை ஆதரிப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எதிர்காலததை பாதுகாக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட மசோதா

இச்சட்டத்தை இயற்றிய உகாண்டா அமைச்சர் டேவிட் பஹாட்டி கூறுகையில், "ஏற்கனவே 30 ஆப்பிரிக்க நாடுகள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உறவை தடை செய்திருக்கின்றன. தன்பாலினத்தவர்கள் தங்களை LGPTQ சமூகம் என அடையாளப்படுத்திக்கொள்வதை குற்றமாக்கும் சட்டம் உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், இது தங்கள் குழந்தைகளின் எதிர்காலததை பாதுகாக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட மசோதா எனவும், தேசத்தின் இறையாண்மை பற்றியது எனவும் டேவிட் பஹாட்டி கூறியிருக்கிறார். தற்போது இந்த மசோதா உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் நீண்ட காலமாகவே LGPTQ சமூகத்தை எதிர்த்து வந்தவர். 2013 LGPTQ சமூகத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தில் அவர் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.